திண்டிவனம் பூதேரி பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திண்டிவனம்: திண்டிவனம், பூதேரி கிராமத்தில், பால விநாயகர், பாலமுருகன், துர்க்கை, அங்காளம்மன் ஆகிய பரிவாரங்களை கொண்டுள்ள பொன்னியம்மன் கோவில் கும்பாபி ஷேகம் நேற்று (செப்., 16ல்) நடந்தது.
இதையொட்டி, கடந்த 13ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து 15ம் தேதி கோபுர கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று 16ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு யாக சாலை பூஜை, தீபாராதனை, கலசம் புறப்பாடு நடந்தது.தொடர்ந்து காலை 7:15 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், அடுத்து மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக விழாவில் திண்டிவனம் முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், பூதேரி தண்டபாணி, கோபால், காளிதாஸ், தீர்த்தக்குளம் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை, பூதேரி கிராம பொது மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.