அடேங்கப்பா.. எத்தனை ராமாயணம்...
ADDED :4902 days ago
ஸ்ரீராமனின் காலத்திலேயே ரிஷிகள் பலரும் அவரின் சரிதத்தை அருளியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன. ச்யவனர், போதாயனர் முதலானோர் அருளிய ராம சரிதம் பூரணமாக கிடைக்கவில்லை என்பர். வால்மீகி முனிவரால் ஆதியில் நூறுகோடி ஸ்லோகங்களால் அருளப்பட்டது, சதகோடி ராமாயணம். இதன் பாகமாகத் திகழ்வது ஆனந்த ராமாயணம். மேலும் அத்யாத்ம ராமாயணம், அத்புத ராமாயணம், அக்னிவேச்ய ராமாயணம், ஸ்ங்க்ரஹ ராமாயணம், மூல ராமாயணம், யோக வாசிஷ்ட ராமாயணம், ஸ்ரீதர ராமாயணம், மந்த்ர ராமாயணம், ரகு வம்சம், பட்டி காவ்யம், கம்பராமாயணம், ராம நாடகம், பாஸ்கர ராமாயணம், துளசிதாஸ் ராமாயணம், மொல்ல ராமாயணம் ஆகியனவும் ஸ்ரீராமரின் புகழைச் சிறப்பிக்கின்றன. தவிர ஜைன ராமாயணம் மற்றும் பவுத்த ராமாயணம் எனும் நூல்களும் உண்டு!