உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையத்தில் ஆரோக்கிய மாதா தேர்த்திருவிழா

மேட்டுப்பாளையத்தில் ஆரோக்கிய மாதா தேர்த்திருவிழா

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் ஆரோக்கிய அன்னை சர்ச்சில், தேர்  திருவிழா நடந்தது.மேட்டுப்பாளையம்  காரமடை சாலையில், அற்புத கேபி  ஆரோக்கிய அன்னை சர்ச் உள்ளது. இங்கு கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன்  தேர் திருவிழா துவங்கியது.

கடந்த 15ம் தேதி காலையில் கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது.

அதை அடுத்து மாலையில் தேர் திருவிழா திருப்பலி நடந்தது.பாதிரியார் அமலன் தலைமையில், 11 பாதிரியார்கள் பங்கேற்று, தேர் திருவிழா திருப்பலியை நிறைவேற்றினர். இதையடுத்து அலங் காரம் செய்த தேர்களின் பவனி நடந்தது.காரமடை சாலையில் மீனாட்சி பஸ் ஸ்டாப் வரை சென்று, மீண்டும் தேர் சர்ச்சை வந்தடைந்தது. இறுதியில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !