உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுாரில் ஆதிபராசக்திக்கு பால் குட ஊர்வலம்

அன்னுாரில் ஆதிபராசக்திக்கு பால் குட ஊர்வலம்

அன்னுார்:அன்னுாரில் ஆதிபராசக்தி பக்தர்களின் பால்குட ஊர்வலம்  நடந்தது.அன்னுார், தென்னம்பாளையம் ரோட்டில், ஆதிபராசக்தி சித்தர் சக்தி  பீடம் உள்ளது. நேற்று முன்தினம் (செப்., 15ல்) செவ்வாடை பக்தர்கள், ஓதிமலை ரோட்டிலுள்ள பாதவிநாயகர் கோவிலிலிருந்து, பால் குடம் மற்றும் பூவோடு ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.

அக்ரஹார வீதி, கூத்தாண்டார் கோவில் வீதி. சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக கோவிலை அடைந்தது. அங்கு ஆதிபராசக்திக்கு, பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி அபிஷே கம் செய்தனர்.  

அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.அன்னுார்  சுற்றுவட்டாரத் திலிருந்து, 1,000 க்கும்மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !