உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிபாரிசு செய்ய வேண்டுமா?

சிபாரிசு செய்ய வேண்டுமா?

அல்லாஹ் தினமும் இரண்டு வான தூதர்களை பூமிக்கு அனுப்புகிறான். இவர்களின் பணி என்ன தெரியுமா? பிறருக்காக செலவு செய்யும் தாராள மனம் கொண்டவனுக்காக ”மற்றவர் நன்மைக்காக செலவிடும் இவருக்கு அருளைக் கொடு.  நல்லதொரு பிரதிபலனை வழங்கு” என சிபாரிசு செய்வார். இன்னொரு தூதர் கஞ்சர்களைப் பார்த்து, ”கஞ்சத்தனம் புரியும் இவர்களுக்கு அழிவைக் கொடு” என்று சொல்வார்.  ”தேவைக்கு அதிகமாக இருப்பதை தேவைஉடையவர்களுக்கு செலவிடாவிட்டால் தீங்கு ஏற்படும். உன்னிடம் தேவைக்கு மட்டுமே பணம் இருக்கிறது அதை பிறருக்கு நீ செலவிடாவிட்டால், அதற்காக இறைவன்உன்னைக் கண்டிக்க மாட்டான்”.

பொன்மொழிகள்

*  தனிமையில் இருப்பதை விட நல்லவர்களுடன் இருப்பதே மேல்.
*  வாழ்வில் மதி மயங்காமல் வாழ்ந்தால் இறைவன் நேசிப்பான்.
*  கொடுத்த வாக்கை மீறுபவர்கள் உண்மை முஸ்லிம் அல்ல.
*  ஆணும் பெண்ணுமாக  வாழும் இல்லறம் இறைவன் வகுத்த வழி.
*  நாக்கை அடக்கி வையுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !