மலை தீபம் ஏற்றுவது ஏன்?
ADDED :2218 days ago
தீப தரிசனம் பாவ விமோசனம் என்பர். வீட்டிலும் சரி, கோயிலிலும் சரி விளக்கேற்றுவது அவசியம். பளிச்சென ஏற்றி இருக்கும் விளக்கையும், அழகான பெண்ணையும் ஒப்பிடுவர். குடும்பத்துக்கு மருமகளாக வரும் பெண்ணை ’விளக்கேற்ற வந்தவள்’ என்பார்கள் பெரியவர்கள். ஏனெனில் பெண்களால் தான் வீடும், நாடும் விளங்கும்.
வீட்டில் விளக்கேற்றும் பொறுப்பு பெண்களுக்கே உரியது. விளக்கை தரையில் ஏற்றி வைப்பது கூடாது. அதற்காக தனி பலகை வைக்க வேண்டும். அது எவ்வளவு உயரம் இருக்கிறதோ அந்தளவுக்கு வாழ்வும் உயரும். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற மலைகளில் தீபமேற்றுவது அதை தரிசிப்பவர்கள் உயர வேண்டும் என்பதால் தான்.