கீதை காட்டும் பாதை
ஸ்லோகம்:
பிதாஹமஸ்ய ஜகதோ
மாதா தாதா பிதாமஹ!
வேத்யம் பவித்ர மோங்கார
ருக்ஸாம யஜுரேவ!!
கதிர் பர்தா ப்ரபு: ஸாக்ஷீ
நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத்!
ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம்
நிதாநம் பீஜமவ்யயம்!!
தபாம்யஹ மஹம் வர்ஷம்
நிக்ருஹ்ணாம் யுத்ஸ்ருஜாமி ச!
அம்ருதம் சைவ மருத்யுஸ்ச
ஸத ஸச்சாஹமர்ஜுந!!
(ஒன்பதாம் அத்யாயத்திலுள்ள ஸ்லோகம்)
பொருள்: உலகங்களை எல்லாம் தாங்குபவனும், கர்மத்திற்கு பலன் தருபவனும் நானே! தாயும், தந்தையும், பாட்டனும் நானே! அறியத்தக்கவனும், புனிதமானவனும், ஓங்கார மந்திரமும், ரிக், யஜுர், சாம வேதங்களும் நானே! எல்லா உயிர்களையும் ஆள்வதும், காப்பதும் நானே! அனைத்திற்கும் இருப்பிடமும், புகலிடமும் நானே! கைமாறு கருதாமல் உதவும் நண்பன் நானே! உலகம் தோன்றவும், பிரளயத்தில் ஒடுங்கவும் காரணம் நானே! அழிவில்லாத வித்தாக இருப்பதும் நானே! சூரியனாக வெப்பம் தருவதும், மழை பெய்யச் செய்வதும் நானே! உயிர்களை அழிக்கும் காலனும் நானே! உலகில் உள்ள எல்லாமே நான் தான்!