விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உழவார பணி
ADDED :2222 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், அப்பர் சுவாமி பிறந்த நட்சத் திரத்தையொட்டி உழவார பணி நடந்தது.அப்பர் பிறந்த சதய நட்சத்திரத்தையொட்டி, பழமலை நாதர் உழவார தொண்டர் திருக்கூட்டம் சார்பில், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உழவாரப் பணி நடைபெறும்.
அதன்படி, நேற்று முன்தினம் (செப்., 16 ல்) காலை, சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, வெளி பிரகாரம், உள் பிரகாரம், நுாற்றுக்கால் மண்டபம், வசந்த மண்டபம் ஆகிய பகுதிகளில் முட்புதர்கள், குப்பைகள் அகற்றப்பட்டு, துாய்மை செய்யப்பட்டது.முன்னதாக, காலை 8:00 மணியளவில், அப்பர் படத்துடன் தேவாரம் பாடியபடி, வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.