மானாமதுரையில் தாயமங்கலம் திசையில் பொங்கல் வைத்த பக்தர்கள்!
ADDED :5049 days ago
மானாமதுரை: மானாமதுரை அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் தாயமங்கலம் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது. காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தாயமங்கலம் கோவில் அமைந்துள்ள திசையை நோக்கி மானாமதுரையில் ஊருக்கு வெளியே உள்ள பகுதிகளில் பொங்கல் வைத்து, ஆடு,கோழி பலியிட்டுநேர்த்திக்கடனை செலுத்தினர்.