உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரநாதர் உண்டியல் வசூல் ரூ.23 லட்சம்

ஏகாம்பரநாதர் உண்டியல் வசூல் ரூ.23 லட்சம்

 காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில், 23 லட்சத்து, 59 ஆயிரம் ரூபாய், காணிக்கையாக கிடைத்தது.காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள், உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஹந்து அறநிலையத் துறை இணை ஆணையர், அனுமதி பெற்று எண்ணப்படுகிறது. அதன்படி, உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 23 லட்சத்து, 59 ஆயிரம் ரூபாய், 27 கிராம் தங்கம், 290 கிராம் வெள்ளி, கோவிலுக்கு வருவாயாக கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !