மணக்குள விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2571 days ago
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.மணக்குள விநாயகர் கோவில் 69ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
5ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அதைத் தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகளுடன் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது. 13ம் தேதி தேர் விழாவும், 14ம் தேதி தீர்த்தவாரியும் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்றுமுன்தினம் ஊஞ்சல் உற்சவமும், நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது. வரும் 26ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.