கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் ஏகாம்பர நாதேஸ்வரர் கோவில்
ADDED :2204 days ago
வெங்காடு: வெங்காடு கிராமத்தில், சிதிலமடைந்து இருந்த ஏகாம்பரநாதேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழாவிற்கு தயாராகி வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில், 800 ஆண்டுகள் பழமையான ஏகாம்பரநாதேஸ்வரர் கோவில் உள்ளது.பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்திருந்த இந்த கோவிலை, அப்பகுதி மக்கள் இணைந்து, நன்கொடையாளர்கள் உதவியுடன் புதுப்பித்து கட்டி வருகின்றனர்.இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், கோவில் கட்டுமான பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன. கார்த்திகை மாதத்தில், கோவிலில் கும்பாபிஷேக விழாவை நடத்த திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.