கீதை காட்டும் பாதை
ADDED :2215 days ago
ஸ்லோகம்
அஹங்காரம் பலம் தர்பம்
காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:!
மாமாத்ம பரதே ஹேஷு
ப்ரத் விஷந்தோப்ய ஸூயகா:!!
தாநஹம் த்விஷத: க்ரூராந்
ஸம்ஸாரேஷு நராத மாந்!
க்ஷிபாம்ய ஜஸ்ரம ஸுபாந்
ஆஸுரீஷ்வேவ யோநிஷு!!
ஆஸுரீம் யோநிமா பந்நா
மூடா ஜந்மநி ஜந்மநி!
மாமப்ராப் யைவ கெளந்தேய
ததோ யாந்த்யதமாம் கதிம்!!
(11ம் அத்யாயம் – தைவாஸுர
ஸம்பத் விபாக யோகம்)
பொருள்: ஆணவம், உடல் வலிமை, தற்பெருமை, பேராசை, கோபம் போன்ற தீய குணங்களால் பிறரை துன்புறுத்து பவர்கள் தங்களின் உடலிலும், மற்றவர் உடல்களிலும் உள்ள அந்தர்யாமியான என்னை (பகவான் கிருஷ்ணர்) வெறுப்பவராவர். இப்படி பாவம் செய்யும் தீயவர்கள் உலகில் மீண்டும் மீண்டும் அசுரப்பிறவி எடுப்பர். அறிவற்ற அவர்கள் என்னை அடைய முயற்சி செய்யாததால் ஒவ்வொரு பிறவியிலும் தாழ்ந்த நிலையை அடைந்து இறுதியில் நரக உலகை அடைவர்.