பிரசன்ன விநாயகர் கோவிலில் நவராத்திரி விழா வரும் 29ல் துவக்கம்
ADDED :2232 days ago
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், நவராத்திரி விழா வரும் 29ம் தேதி துவங்கி அக்., 7 வரை நடக்கிறது.கார்த்திகை விழா மன்றம் சார்பில், 58 ம் ஆண்டு நவராத்திரி இசை, இலக்கிய கலை விழா வரும் 29ம் தேதி முதல் அக்., 7 ம் தேதி வரை தினமும் மாலை, 6:00 மணிக்கு நடைபெறுகிறது.வரும் 29ம் தேதி மங்கள இசை நிகழ்ச்சி, திருஞான சம்பந்தர் தேவாரமும், அறுபடை வீடு திருப்புகழும் இசைக்கச்சேரி நடக்கிறது. தினமும், ஆன்மிக உரை, பரதநாட்டியம், நடக்கிறது. ஆன்மிக பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கச்சேரிகள், பரதநாட்டியம் நடக்கின்றன.