உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூர் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை அமோகம்

ப.வேலூர் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை அமோகம்

ப.வேலூர்: நவராத்திரி விழாவையொட்டி, கொலு பொம்மைகள் விற்பனை,  ப.வேலூரில் அமோகமாக நடக்கிறது. நவராத்திரி விரதம், வரும், 29ல்  தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நவராத்திரி கொலு பொம்மை விற்பனை,  ப.வேலூரில் ஜோராக நடந்து வருகிறது.

மதுரை, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளிலிருந்து களிமண், காகிதக்கூழ் ஆகிய பொருட்களால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு ள்ளன.  

திருக்கல்யாணம், தசாவதாரம், ரங்கநாதர், அஷ்டலட்சுமி, குபேரன், அறுபடை வீடு  மற்றும் பல்வேறு சுவாமிகளின் உருவங்கள் கொண்ட பொம்மைகள் காண்பதற்கு  கண்ணை கவரும் வகையில் உள்ளன. இந்நிலையில், ப.வேலூர் தாலுகாவில்  உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழாவையொட்டி, கொலு கண்காட்சி  அமைப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !