உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவிலில் சூரிய தரிசனம்!

சிவன் கோவிலில் சூரிய தரிசனம்!

திருவெண்ணெய் நல்லூர்:விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் சிவன் கோவிலில், நேற்று நடந்த சூரிய தரிசனத்தை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருநாவலூர் மனோன்மணி சமேத பக்த ஜனேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 6.14 மணிக்கு சூரிய ஒளி கருவறையில் உள்ள லிங்கம் மீது விழுந்தது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து, 5 நிமிடங்கள் வரை நீடித்தது.பின்னர் அம்பாள் திருமேனியின் மீது, 6.21 முதல் 6.25 வரையில் சூரிய ஒளி விழுந்தது. இதன் பின் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசித்தனர்.சூரிய தரிசனம் வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. தரிசனம் காணவரும் பக்தர்கள் காலை 5.30 மணிக்குள் கோவிலுக்குள் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !