உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவில் பங்குனி தேரோட்டம்!

சென்னிமலை முருகன் கோவில் பங்குனி தேரோட்டம்!

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது.ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மலை மீது பாலதாண்டாயுத மூர்த்தம் கொண்டு ,எழுந்தருளி இருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமிக்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர தேர்திருவிழா, ஆறு நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு பங்குனி உத்திர விழா, கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கடந்த வியாழன் இரவு திருக்கல்யாணம் நடந்தது.

நேற்று காலை, தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஜம்பு என்ற சண்முகசுந்தரம், துணைத் தலைவர் தெய்வசிகாமணி, அறநிலைய துறை உதவி ஆணையாளர் தனபாலன், செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழக்க, தேர் நிலையை விட்டு புறப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் "அரோகரா கோஷங்களை எழுப்பினர். தேர் கிழக்கு, தெற்கு, மேற்கு, ரத வீதி வழியாக வலம் வந்து வடக்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் தேர்மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர். மாலையில் தேர்நிலை சேர்ந்தது.தேராட்டத்தில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குõர், சிரகிரி டெக்ஸ் மேலாளர் ஆனந்தன், பி.கே., புதூர் டெக்ஸ் உலகநாதன், விசைத்தறி உரிமையாளார்கள் சங்க தலைவர் சாமிநாதன், சுப்புசாமி, சென்டெக்ஸ் சதீஸ்குமார், யெங் இந்தியா பள்ளி தாளாளர் லட்சுமணன், வணிகர் சங்க துணை தலைவர் அம்மன் ராஜாகோபால், உட்பட பலர் பங்கேற்றனர்.இன்று காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், நசியனூர் நாட்டுக்கவுண்டர்கள் மடம் மண்டபக் கட்டளையும், பகல் ஈங்கூர் கிராம நாட்டுக்கவுண்டர்கள் மடம் மண்டபக் கட்டளையும் நடக்கிறது. இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும்,எழுமாத்தூர் பனங்காடான் குலம், செல்லங்குலம், கொங்கு வேளாளக்கவுண்டர்கள் மடம் மண்டபக்கட்டளை நடக்கிறது.வரும் 7ம் தேதி காலை 8 மணிக்கு மகாதரிசன நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.ஏற்படுகளை செயல்அலுவலர் பசவராஜன், கோவில் தலைமை எழுத்தர் ராஜீ, பாலசுப்பிரமணியம் கோவில் தமிழ் புலவர் அறிவு ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !