உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலதேவி கண்ணகி கோயில் விழாவை முடக்க அதிகாரிகள் முயற்சி!

மங்கலதேவி கண்ணகி கோயில் விழாவை முடக்க அதிகாரிகள் முயற்சி!

கூடலூர்:முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையால், இரு மாநில எல்லைப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் விழாவை முடக்க தமிழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே, தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் யாருக்குச் சொந்தம் என்பதில், இரு மாநிலங்கள் இடையே பிரச்னை உள்ளது. இருப்பினும்,ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி தினத்தில் இக்கோயிலில் இரு மாநில பக்தர்களும் விழா கொண்டாடுவார்கள். கோயிலுக்கு செல்லும் பாதை கேரள மாநிலம் வழியாக இருப்பதால், விழா நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி அதன்படி விழா நடைபெறும்.விழாவிற்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், இதுவரை கூட்டம் நடைபெறவில்லை.நேற்று முன்தினம் திடீரென தேனி கலெக்டர் பழனிச்சாமி தலைமையில், தமிழக அதிகாரிகள் ஆய்வு நடத்துவதற்காக கண்ணகி கோயிலுக்கு சென்றனர். கேரள மாநிலம் வழியாக கோயிலுக்கு செல்லும் பாதை, மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்னையால் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், இவ்வாண்டு கண்ணகி கோயில் விழாவில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால், விழாவை முடக்க தமிழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக ரோடுசேதமடைந்துள்ளது என்ற காரணத்தையும் கூறுகின்றனர். இது தமிழக பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !