உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. நவராத்திரி உற்ஸவ விழாவை முன்னிட்டு நேற்று காலை செப்., 29 முதல் அக்., 28 வரை 10 நாட்களும் உபயதாரர்கள் மூலம் சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடக்க உள்ளது. தினமும் காலை 10 மணிக்கு பத்மாஸனித்தாயாருக்கு விஷேச திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவமும் நடக்கும். அக். 8 (செவ்வாய்) விஜயதசமி அன்று ஆதிஜெகநாதப்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, காலை 8 மணிக்கு நான்குரத வீதிகளிலும் அம்பு எய்யும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகமும், பத்மாஸனித்தாயார் கைங்கர்ய சபாவும் செய்து வருகின்றனர்.சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர்சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் நாளை செப்.,29 ல் நவராத்திரி உற்ஸவ விழா துவங்கியது.பழமையான சிவாலயமாகவும், கடற்கரையோரம் அமைந்தகோயிலாகவும் விளங்கி வருகிறது.கொழுப்படிகள் அமைக்கப்பட்டிருந்தது. செப்., 29ல் ராஜராஜேஸ்வரி அலங்காரமும், அடுத்த நாள் சிவபூஜையும், தொடர்ந்து அன்னலட்சுமி, வீரலட்சுமி, தான்யலட்சுமி, தனலட்சுமி, சந்தான லட்சுமி, மகிஷாசுரமர்த்தினி ஆகிய அலங்காரங்களில் உற்ஸவர் அம்மன் காட்சி தர உள்ளார்.அக்., 4ல் மாலை விளக்கு பூஜையும் நடக்க உள்ளது. பூஜைகளை சேகர் குருக்கள், சந்தோஷ் குருக்கள் மற்றும் ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !