பாதுார் பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்
ADDED :2314 days ago
உளுந்துார்பேட்டை: பாதுார் பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.நேற்று முன்தினம் (செப்., 28ல்) காலை 10:30 மணியளவில் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் நடந்தது.
குண்டத்தில் பழங்கள், புடவைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் ஆசியுடன் 5 குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டது.பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலை யாக குண்டத்தில் கொட்டப்பட்டது. யாகத்தில் உளுந்துார்பேட்டை, விழுப்புரம், திருக்கோவிலுார், கடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பிரத்தியங்கரா தேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.