உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் நவராத்திரி விழா கோலாகல துவக்கம்

திருப்பூரில் நவராத்திரி விழா கோலாகல துவக்கம்

திருப்பூர்:நவராத்திரி விழா நேற்று 29ல் கோலாகலமாக துவங்கியது; விதவிதமான  பொம்மை களை கொலு வைத்து, கோவில்கள் மற்றும் வீடுகளில், பக்தர்கள்  வழிபட்டனர். ஆண்டு தோறும் புராட்டாசி அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, ஒன்பது  நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி, நேற்று 29ல் நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது. கோவில்கள்  மற்றும் வீடுகளில், கொலுவைத்து, பல்வித பட்சணங்கள் படைத்து  வழிபட்டனர்.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள்  கோவில், மிஷன் வீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அவிநாசி ரோடு  சாரதாம்பாள் கோவில் உட்பட, சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், பெண்கள்  கூட்டு வழிபாட்டை நேற்று 29ல் துவங் கினர்.

படிக்கட்டு போன்ற மேடை அமைத்து, அவற்றில் விதவிதமான கொலு பொம்மைகள் அடுக் கப்பட்டன. அதாவது, தரையில் புழு, பூச்சி பொம்மைகள், அடுத்து சிறு விலங்கு, குழந்தை, இளைஞர்கள், முனிவர் என சென்று, இறுதியாக படியளந்த பரந்தாமனை சென்றடையும் வகையில், பொம்மைகள் அடுக்கப்பட்டன.

திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், தீபங்கள் ஏற்றி, மலர் மாலைகள் சாற்றி, சுண்டல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பதார்த்தங்கள் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, குத்துவிளக்கு பூஜை வழிபாட்டுடன், பாடல்கள் பாடியும், பஜனை செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், வரும், 7 ம் தேதி வரை, தினமும் நவராத்திரி வழிபாடு நடத்தப்படும். வரும், 8ம் தேதி லட்சுமி வழிபாடும், விஜயதசமி வழிபாடும் நடக்க உள்ளது.

பல்லடம்: பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று 29ல் கொலு வைக்கப்பட்டது.

முன்னதாக, கணபதி ஹோமம், நவராத்திரி யாகம் 108 அர்ச்சனைகள் நடந்தது.  அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன்  அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இன்று  30 ல்துவங்கி, அக்., 8 வரை, தினசரி மாலை, 6 மணிக்கு, சிறப்புஆன்மிக  சொற்பொழிவுகள், மற்றும் பஜனை உள்ளிட்ட வை நடைபெறவுள்ளதாக, விழா  குழுவினர் தெரிவித்துள்ளனர். பல்லடம் வட்டாரத்திலுள்ள பல்வேறு  கோவில்களிலும், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !