இளநீர் தந்த சிட்டு லிங்கம்
ADDED :2293 days ago
சிவபக்தையான கர்ப்பிணி ஒருத்தி ஐந்தெழுத்தான ’நமச்சிவாய’ மந்திரத்தை ஜபித்தபடி சென்றாள். வெயிலின் கடுமையால் அவளுக்கு மயக்கம் வந்தது.
உதவ எண்ணிய சிவன், அருகில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் குலை தோன்றச் செய்தார். மேலும் சிவனே வழிப்போக்கராக தோன்றி இளநீர் பறித்துக் கொடுத்தார். தாகம் தீர்ந்த அப்பெண் மகிழ்ந்த போது சிவலிங்கமாக காட்சியளித்தார். இளநீர் கொடுத்த இந்த சிவன் பாபநாசத்தில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள கபிஸ்தலத்தில் குடியிருக்கிறார். ’அழகு சடைமுடி நாதர்’ என்பது இவரது திருநாமம். இளநீர் தந்த பெருமான் என்பதால் ’குலை வணங்கீசர்’ எனப்படுகிறார். இங்கு வாழ்ந்த சிட்டுக்குருவி ஒன்று சிவனருளால் முக்தி பெற்றதால் இவர் ’சிட்டு லிங்கம்’ எனப்படுகிறார். தென்னை மரமே இங்கு தலவிருட்சம்.