நெகமத்தில் வள்ளலாரின் 197வது ஜெயந்தி விழா
ADDED :2339 days ago
நெகமம்:வடலுார் ராமலிங்க வள்ளலாரின், 197ம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின், 75ம் ஆண்டு விழா நெகமத்தில் நேற்று 30ல், நடந்தது.
நெகமம், நாகர் மைதானத்தில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கட்ட டத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் (செப்., 29ல்), வள்ளலார் தின துவக்க விழா நடந்தது.
விழாவுக்கு, அருட்பிரகாச வள்ளலாளர் தலைமை வகித்தார். மாலை , 5:00 மணிக்கு மகாமந்திர வழிபாடு மற்றும் ஜோதி வழிபாடு நடந்தது. தொடர்ந்து சத்சங்கம் நிகழ்வும் நடந்தது.நேற்று (செப்., 30ல்) காலை, 6:00 மணிக்கு அகவல் பாராயணம், 8:00 மணிக்கு சன்மார்க்க சங்க கொடியேற்றுதல் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு சொற்பொழிவு, ஆன்மநேய அன்பர்களின் வாழ்த்துரை, சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏராளமான சன்மார்க்க சங்க அன்பர்கள் பங்கேற்றனர்.