பயம் நீங்கி தைரியம் தரும் கவுமாரி
ADDED :2294 days ago
சப்த மாதர் வரிசையில் ஆறாவதாக இருப்பவள் கவுமாரி. முருகப்பெருமானின் அம்சமாகத் திகழ்பவள். ’கவுமாரி’ என்றால் ’இளையவள்’ என பொருள். அத்தி மரத்தின் அடியில் மயில் வாகனத்தில் காட்சி தருபவள் இவள். முன் இரு கைகளில் ஒன்று வரம் தரும் நிலையிலும், மற்றொன்று அடியாருக்கு அபயம் தரும் நிலையிலும் இருக்கும். மற்ற கைகளில் வேல், சேவல் கொடி, தண்டம், வில், பாணம், கந்தம், பத்மம், பத்ரம், கோடரி ஆகியன இடம் பெற்றிருக்கும். முருகனை போலவே கவுமாரிக்கும் சிவப்பு நிற மலர்கள் ஏற்றவை. வீரத்தின் வடிவமான கவுமாரியை செவ்வாயன்று வழிபட்டால் பயம் நீங்கி, தைரியம் அதிகரிக்கும்.