உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் தமிழ் மணம் கமழ்ந்த தெய்வத்தமிழ் திருவிழா

திருப்பூரில் தமிழ் மணம் கமழ்ந்த தெய்வத்தமிழ் திருவிழா

திருப்பூர்:திருப்பூரில் மூன்று நாள் நவராத்திரி விழா நடந்து வருகிறது.நவராத்திரி முன்னிட்டு தெய்வத்தமிழ் விழா சவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் 29 ல், துவங்கியது.

இதில், ’தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ எனும் தலைப்பில் திருவாசக பாடல், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு குறித்து, பவானி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை தலைவர் தியாகராஜன் பேசினார். தஞ்சை தமிழ் பல்கலை பேராசிரியர் நல்லசிவம் பாடினார்.விழாவில், ’மணிவயிறு வாய்த்த மங்கையர் விழா’ எனும் தலைப்பில், பேரூர் மணிவாசகர் மன்ற அறக்கட்டளை செயலர் குமரலிங்கம் பேசினார். இன்று அடிகள், கோட்புலி நாயனார் குறித்த நாடக நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !