திருவாடானை அருகே மிக்கேல் அதிதுாதர் தேர் பவனி
ADDED :2282 days ago
திருவாடானை: திருவாடானை அருகே அரியப்புவயல் மிக்கேல் அதிதுாதர் ஆலய பெருவிழா செப்.,23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் (செப்., 29ல்) நடந்தது. மிக்கேல் அதிதுாதர் அமர்ந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பாதிரியார்கள் சூசை மிக்கேல், அந்தோணிசாமி உட்பட அரியப்புவயல், எட்டுகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.