பழநியில் ஆலய தேர்பவனி
ADDED :2232 days ago
பழநி : பழநி புது தாராபுரம் ரோடு புனித மிக்கேல் அதிதுாதர் ஆலய விழா கடந்த செப்.,22ல் கொடி யேற்றத்துடன் துவங்கி 29 வரை நடந்தது. பாதிரியார் ஸ்டேன்லி ராபின்சன் தலைமை வகித்தார். ஒவ்வொரு நாளும் திருப்பலியும், சிறப்பு மறையும் நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 29ல்) இரவு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித மிக்கேல் அதிதுார் தேர்பவனி கான்வென்ட் ரோடு, ஆர்.எப்.,ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தது.