கிருஷ்ணராயபுரம் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு பூஜை
ADDED :2232 days ago
கிருஷ்ணராயபுரம்: நவராத்திரி விழாவை முன்னிட்டு, லாலாப்பேட்டை பாவநாராயண பெருமாள் கோவிலில், கொலு வைத்து சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை யில், பாவ நாராயண பெருமாள் கோவில் உள்ளது.
இதில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.