குமாரபாளையத்தில் குபேரலட்சுமி நவராத்திரி விழா ருத்ர யாகம்
ADDED :2232 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், குபேரலட்சுமி நவராத்திரி விழாவில் ருத்ரயாகம் நடந்தது.
குமாரபாளையம், வட்டமலையில் உலக சமாதான ஆலயம் சார்பில் குபேரலட்சுமி நவராத்திரி கொலு திருவிழா நேற்றுமுன்தினம் (செப்., 29ல்) துவங்கியது. நேற்று, (செப்., 30ல்)சிவன்மலை நாகேஸ்வர குமார குருக்கள் தலைமையில் மஹா ருத்ர யாகம் நடந்தது. இதையடுத்து வைடூ ர்ய லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஆன்மிக விவாத நிகழ்ச்சி நடந்தது. இன்று (அக்., 1ல்), அனுராதா கிருஷ்ணமூர்த்தியின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.