உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றம் லட்சுமி தீர்த்த குளத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்

திருக்கழுக்குன்றம் லட்சுமி தீர்த்த குளத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் லட்சுமி தீர்த்த குளத்தை துாய்மைப்படுத்தும் பணியில், இளைஞர்கள் நேற்று (செப்., 30ல்), ஈடுபட்டனர்.

திருக்கழுக்குன்றம், அப்துல்கலாம் அறக்கட்டளை மற்றும் நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தின் இளைஞர்கள் சார்பில், வார விடுமுறை நாட்களில், நீர் நிலைகளை துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது.அந்த வகையில், வார விடுமுறை நாளான நேற்று (செப்., 30ல்), 40 இளைஞர்கள், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலை சார்ந்த, லட்சுமி தீர்த்த குளத்தை துாய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.செடிகள், குப்பை கழிவுகளை அகற்றுதல், படித்துறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை, இளைஞர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !