பரமக்குடியில் நவராத்திரி விழா
ADDED :2230 days ago
பரமக்குடி, :பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சவுந்தரவல்லித்தாயார் மற்றும் ஆண்டாள் பல்வேறு அலங்காரத்தில் உள்ளனர். கலைமகள் விழாக்குழுவினரால் தினமும் சொற்பொழிவு, பரதம் நடக்கிறது. எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார் அருள் பாலிக்கிறார். பரமக்குடி சின்னக்கடைத் தெரு துர்க்கையம்மன் கோயிலில் மூலவர் தினமும் பச்சை, சிவப்பு, மஞ்சள் சாற்றி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.தினமும் கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் பரமக்குடியில் பெரும்பாலான வீடுகளில் பழங்காலம் முதல் தற்போது வரை அனைத்து நிகழ்வுகள் குறித்தும் கொலு வைத்திருக்கின்ற னர்.