உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி ஆறாம் நாள்

நவராத்திரி ஆறாம் நாள்

மதுரை மீனாட்சியம்மன் இன்று ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். குமரகுருபரர் குழந்தையாக இருந்த போது, மூன்று வயது வரை பேச்சுத்திறன் அற்றவராக இருந்தார். பின்னர் திருச்செந்துார் முருகனருளால் குறை நீங்கப் பெற்றார். இதைக் கேள்விப்பட்ட மதுரை மன்னர் திருமலைநாயக்கர், அவரை மதுரைக்கு வரவழைத்தார். முருகனின் தாயான மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடும்படி கேட்டுக் கொண்டார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழைப் பாடிய குமரகுருபரர், ஊசல் பருவத்தில் அம்மன் ஊஞ்சலில் ஆடும் அழகையும், அவள் அருள்புரியும் தன்மையையும் வியந்து போற்றினார்.  ஊஞ்சலில் ஆடும் மீனாட்சியை தரிசித்தால் கவலை தீரும். மகிழ்ச்சி நிலைக்கும்.

நைவேத்யம்: தேங்காய்சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல்

பாட வேண்டிய பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !