கோவை நவராத்திரியை முன்னிட்டு பொம்மலாட்டம்
கோவை:ஈஷா யோகா மையத்தில், தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான பொம்மலாட்டம், நாளை (அக்., 6ல்) நடக்கிறது.ஈஷாவில், நடப்பாண்டு நவராத்திரி திருவிழா, கடந்த, 29-ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், நந்தி முன்பு நடக்கும் மஹா ஆரத்தி உட்பட பல்வேறு சிறப்பம்சங்களுடன், கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான பொம்மலாட்டம், நாளை (அக்., 6ல்) நடக்கிறது. காரைக்கால் கேசவசாமி குழுவினர் நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். 76 வயதான இவர், 30 ஆண்டுகளாக பொம்மலாட்ட கலையை நிகழ்த்தி வருகிறார்.
சுமார், 490 கதைகளை உருவாக்கி, அதை பொம்மலாட்டமாக அரங்கேற்றி சாதனை படைத்து ள்ளார். இவரின் கலை சேவையை பாராட்டி, பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இரவு 8:00 மணியளவில், ’3டி’ ஒளி, ஒலி காட்சியுடன் கூடிய ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்ச்சியும் நடக்கிறது.