உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.19.35 லட்சம் காணிக்கை

மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.19.35 லட்சம் காணிக்கை

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு  தினமும் நுாற்று க்கும் மேற்பட்டவர்களும், விடுமுறை மற்றும் செவ்வாய்,  வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக் கணக்கான பக்தர்களும் வந்து அம்மனை  வழிபட்டுச் செல்வர்.

இக்கோவிலில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணுவது வழக்கம். இந்த முறை, 45 நாட்களில், காணிக்கை எண்ணப்பட்டது.

கோவிலில் பல்வேறு இடங்களில் வைத்திருந்த, 22 உண்டியல்கள்  திறக்கப்பட்டு காணிக்கை களை, வி.என்.கே., மகளிர் கல்லுாரி மாணவிகள்,  வெல்ஸ்புரம் பள்ளி மாணவ, மாணவிகள் எண்ணினர். இதில், 19 லட்சத்து, 35  ஆயிரத்து, 610 ரூபாய் இருந்தது. 117 கிராம் தங்கம்; 106 கிராம் வெள்ளி  இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !