உடுமலை நவராத்திரி ஆறாம் நாள் விழா: வீடுகளில் கொலு வைப்பு
                              ADDED :2222 days ago 
                            
                          
                           உடுமலை:நவராத்திரி ஆறாம் நாளான நேற்று 4ல், கொலுவில், அம்பிகையை  சண்டிகா தேவியாக அலங்கரித்து, வழிபட்டனர்.உடுமலை சுற்றுப்பகுதி  கோவில்கள் மற்றும் வீடுகளில், நவராத்தி ரிக்காக கொலு அமைத்து, நாள்தோறும்,  சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
ஆறாம் நாளான நேற்று, கொலுவில், அம்மனை சண்டிகாதேவி அலங்காரத்தில் வழிபட்டனர். இம்முறை பலரது கொலுவில், நின்ற மற்றும் சயன கோலத்தில், அத்திவரதர் இடம் பெற்று ள்ளார்.சீதா கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம், தசாவாதாரம் என, கொலு அமைத்து அசத்தியி ருந்தனர்.  தேசத்தலைவர்கள் ஆன்மிக பெரியோரின் சிலைகளும் இடம் பெற்றிருந்தது.  வரும் , 8ம் தேதியுடன் கொலு வழிபாடு நிறைவு பெறுகிறது.