உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை

கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை மாரியம்மன் கோவிலில், நவராத்திரியை  முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. கிருஷ்ணராயபுரம் அடுத்த  லாலாப்பேட்டை கடை வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, இக்கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள்  வைக்கப் பட்டுள்ளன. தினமும் மாலையில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நவராத்திரி  சிறப்பு பூஜையில், லாலாப்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த,  ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !