குளித்தலை ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை
ADDED :2225 days ago
குளித்தலை: குளித்தலை அடுத்த, குட்டப்பட்டி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவி லில், நவராத்திரியை முன்னிட்டு, கொலு வைத்து சிறப்பு பூஜை நடக்கிறது.
நான்காம் நாளான நேற்று (அக்., 4ல்), சுவாமிக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், கிராம பொதுமக்கள், ஆதிபராசக்தி அம்மன் வழிப்பாட்டுக் குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வரும் திங்கட்கிழமையுடன் நவராத்திரி கொலு பூஜை நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை, வழிபாட்டுக் குழு பொறுப்பாளர்கள் தனம், நல்லதம்பி, சேகர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.