கோலியனூர் பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை சிறப்பு வழிபாடு
ADDED :4937 days ago
விழுப்புரம்:கோலியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.விழுப்புரம் அடுத்த கோலியனூரில் உள்ள பூமிநாயகி, நீளாநாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. மாலை 5.30 மணிக்கு வேங்கை தொல்காப்பியர் தலைமையிலான சப்தகிரி பஜனா மண்டலியினரின் சிறப்பு பஜனைகள் நடந்தது.இரவு 7 மணிக்கு விளக்கு பூஜைகள் துவங்கியது. இதன் பின் நடந்த சிறப்பு பூஜையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.பூமிநாயகி, நீளாநாயகி சமேத வரதராஜ பெருமாள் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழா ஏற்பாடுகளை தர்ம ரக்ஷண சமீதி சபையினர் செய்திருந்தனர்.