விஜயதசமி விழாவிற்காக பழநி கோவிலில் நடையடைப்பு
ADDED :2230 days ago
பழநி : விஜயதசமி விழாவிற்காக, பழநி முருகன் கோவில் நடை, நாளை பிற்பகல், 2:30 மணிக்கு மேல் அடைக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், நவராத்திரி விழா, செப்., 29ல் துவங்கி, நாளை வரை நடக்கிறது. நாளை விஜயதசமி அன்று, வில் அம்பு எய்து, சூரன் வதம் நடக்கிறது. இதற்காக, மலை கோவிலில், வழக்கமாக, மாலை, 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, பகல், 1:30 மணிக்கு நடக்கிறது.அதன்பின், 2:30 மணிக்கு பராசக்திவேல் புறப்பட்ட உடன், சன்னிதி நடை சாத்தப்படும். சூரன் வதம் நிகழ்ச்சிக்கு பின், அர்த்த சாமத்தில், மீண்டும் நடை திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து, பராசக்தி வேலுடன், தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி, கோதைமங்கலம் சிவன் கோவில் செல்கிறார். அங்கு, வில் அம்பு எய்து, சூரன்வதம் நடக்கிறது.