உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி கோவிலில் காமாட்சி அலங்காரத்தில் அம்பாள்

வடபழநி கோவிலில் காமாட்சி அலங்காரத்தில் அம்பாள்

 சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், சக்தி கொலுவின், எட்டாம் நாளான நேற்று, அம்பாள், காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி எட்டாம் நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. சக்தி கொலுவில் பிரதானமாக வீற்றுள்ள அம்பாள், காமாட்சி அலங்காரத்தில், பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.சக்தி கொலுவில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, ஜதி அகாடமி சார்பில், பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை வேத பாராயணம், ஸ்ரீ  ருத்ரம், சமஹம், ஸ்ரீ சூக்தம் நடந்தது. அதைத்தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.மாலை நடந்த பொதுமக்கள், கொலு பாட்டு நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவியர் பாடி  அசத்தினர்.நேற்று மாலை, 7:00 மணிக்கு, ஆரோக்கியம் பெற சக்தி கொடு எனும் தலைப்பில், சாரதா நம்பி ஆரூரனின் சொற்பொழிவு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !