சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வர்ண குடை சாத்தும் விழா
ADDED :2230 days ago
அலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசியையொட்டி வர்ணகுடை சாத்தும் விழா நடந்தது. மதுரையிலிருந்து நவநீதகண்ணன் பஜனை கூடம் சார்பில் அழகுமலையான் வர்ணகுடை பாதயாத்திரையாக எடுத்து வரப்பட்டது. வழியிலுள்ள மண்டபங்களில் பக்தர்கள் குடையை வணங்கினர். பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதியில் தரிசனம் நடந்தது. பின் கோயில் ஆண்டாள் சன்னதி முன் கருடவாகனத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு வர்ண அலங்கார குடை சாத்தப்பட்டது. பெருமாளுக்கு நுாபுரகங்கை தீர்த்தத்தால் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. நிர்வாக அதிகாரிஅனிதா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.