சூலுார் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
ADDED :2230 days ago
சூலுார்: சூலுார் வேங்கடநாத பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம் நடக்கிறது.சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவேங்கடநாத பெருமாள் கோவில் பழமையானது. இங்கு, விஜயதசமி தேரோட்டம் பிரசித்திபெற்றது. கடந்த, 4ம் தேதி இரவு வாஸ்து பூஜையுடன் திருவிழா துவங்கியது. நேற்று காலை சுவாமி வீதி உலா நடந்தது. நாளை காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.