பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
ADDED :2230 days ago
பெ.நா.பாளையம்: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில், நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது.பெரியநாயக்கன் பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை நேரத்தில் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, பெருமாளை வழிபட்டனர்.இதே போல, புதுப்புதுாரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாலையில் சிறப்பு பஜனை நடந்தது.மேலும், பாலமலை ரங்கநாதர் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோவில், திருமலைநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.