கடலாடி தசரா விழா கோலாகலம்: வேடமிட்ட பக்தர்கள்
ADDED :2232 days ago
கடலாடி:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில்பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் உள்ளது. செப்., 29 முதல் நவராத்திரி விஷேச நாட்களைகணக்கில் கொண்டுதசரா பண்டிகை க்காக நேர்த்திக்கடன் பக்தர்கள்பல்வேறு வேடங்களில் நகரில் வலம் வந்துபூஜைக்காக யாசகம் பெற்று வருகின்றனர்.
கடலாடி பத்திரகாளியம்மன் கோயிலில் அக்.,1ல் தசரா குழுவினர் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.மாடன், முனியப்பசாமி,பத்திரகாளி, மீனாட்சியம்மன், அய்யனார், விநாயகர், ஆஞ்ச நேயர், கிளி, சாக்கு வேடம், குறவன் குறத்தி,நாக தேவதை, முனிவர், பிச்சைக்காரர் உள்ளிட் ட60க்கும் மேற்பட்ட வேடங்களை ஒப்பனைக்கலைஞர்கள்மூலம் மேற்கொள்ளப்பட்டு, வேடம் தரித்து நகரில் வலம் வருகின்றனர்.இறுதி நாளான இன்று குலசை கோயிலுக்கு சென்று மகிஷாசுரன் வதம் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.