உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கையில் பிரசார ரத யாத்திரை: பக்தர்கள் வரவேற்பு

சிவகங்கையில் பிரசார ரத யாத்திரை: பக்தர்கள் வரவேற்பு

சிவகங்கை: சிவகங்கையில் ஐய்யப்ப தர்ம பிரசார ரதயாத்திரையில் வீற்றிருந்த  ஐய்யப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மானாமதுரை வழியாக நேற்று முன்தினம் (அக்., 6ல்) மாலை சிவகங்கைக்குள் வந்த ரதத்தை சிவகங்கை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தினர் வரவேற்றனர். நேற்று முன்தினம் (அக்., 6ல்) இரவு சிவன் கோயில் வாசலில் ரதம் நிறுத்தப்பட்டது. நேற்று (அக்., 7ல்) காலை ஐய்ய ப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து யாத்திரையை துவக்கியது.  

சிவன் கோயிலில் இருந்து காமராஜர் காலனி, காஞ்சிரங்கால், செந்தமிழ்நகர், 48  காலனி, இந்திராநகர், வாணியங்குடி, மதுரை முக்கு, காந்திவீதி, நேருபஜார்,  நெல்மண்டி தெருக்கள் வழியே மீண்டும் சிவன் கோயிலை அடைந்தது.  வழிநெடுகிலும் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

சேவா சமாஜ மாநில துணை தலைவர் துரைச்சாமி, நிர்வாக செயலாளர்  மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தனர். குருசாமி ராதா தலைமையில் ரத  ஒருங்கிணைப்பாளர்கள் நாகேஸ் வரன், குணாளன், மாரியப்பன், சேகர், வைரமணி,  சிவபூபதி, பாண்டி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !