லலிதா செல்வாம்பிகை கோவிலில் நாட்டியாஞ்சலி
ADDED :2377 days ago
செஞ்சி: செல்லப்பிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி நாட்டியாஞ்சலி நடந்தது. செஞ்சி அடுத்த செல்லப்பிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் தினமும் நவராத்திரி மகா ஹோமம் காலை, மாலை வேளையில் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி தினமும், சிறப்பு அபிஷேக, அலங்காரமும் மாலையில் மகா தீபாராதனையும் நடக்கிறது. 6ம் நாள் நிகழ்ச்சியில், சென்னை நாட்டிய பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழாக் குழுவினர் பங்கேற்றனர்.