உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையத்தில் நவராத்திரி ஆன்மிக சொற்பொழிவு

குமாரபாளையத்தில் நவராத்திரி ஆன்மிக சொற்பொழிவு

குமாரபாளையம்: குமாரபாளையம், வட்டமலையில், உலக சமாதான ஆலயம்  சார்பில், குபேரலட்சுமி நவராத்திரி கொலு திருவிழா துவங்கியது. ஆன்மிக  சொற்பொழிவு, பரத நாட்டியம், வயலின், வீணை இசை நிகழ்ச்சிகள், யாகங்கள்  நடக்கின்றன. நேற்று முன்தினம் (அக்., 6ல்) இரவு, ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் பேசியதாவது: இறைவனை சமஸ்கிருதம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில்  அழைத்தால்தான் வருவார் என்பதில்லை. தாய்மொழியில் அழைத்தாலே அன்புக்கு  கட்டுப்பட்டு அருள் தருவார். தாய்மொழி கடவுளோடு நெருக்கத்தை ஏற்படுத்தும்.  

தியாகராஜர் தெலுங்கு கீர்த்தனைகளை கேட்ட பின்தான் தமிழில் பக்தி  பாடல்களை எழுத துவங்கியதாக ராஜாஜியே சொல்லியுள்ளார். ஆன்மிக வழி  செல்லுங்கள். மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றிவிட்டு இறைவனை  வணங்கினால் நன்மை கிடைக்கும். மனிதன் ஞானமடையும் திருவிழா நவராத்திரி  திருவிழா. விஜயதசமி ஞானம் அடைகிற நாள். நம் வீட்டில், 12 வயதிற்கு கீழ்  உள்ள மகள் துர்க்கை அம்சம். மனைவி மகாலட்சுமி அம்சம். தாயார் சரஸ்வதி  அம்சம். பெண்களை கடவுளாக மதிக்க வேண்டும். மனைவியின் அருமை  இருக்கும் வரை தெரியாது. பெண்களை மதிப்பதே நவராத்திரி தத்துவம். இவ்வாறு,  அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !