கிருஷ்ணராயபுரம் நவராத்திரி கொலுவில் சரஸ்வதி அம்மனுக்கு பூஜை
ADDED :2559 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கடைவீதி மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, வைக்கப்பட்டுள்ள கொலுவில், சரஸ்வதி சுவாமியை வைத்து பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கடைவீதி மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கொலு வைத்து சிறப்பு பூஜை நடந்தது. நேற்று (அக்., 7ல்) ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை முன்னிட்டு, நவராத்திரி கொலுவில், சரஸ்வதி சுவாமி சிலை வைத்து, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.