விருதுநகரில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
ADDED :2199 days ago
விருதுநகர்:விருதுநகரில் ஆயுத பூஜையையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நவராத்திரி விழா செப். 29ல் துவங்கிய நிலையில் தினமும் கோயில்கள், வீடுகளில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. 9 அவதாரங்களாக ஒவ்வொரு நாளும் அம்மனை சிறப்பு அலங்காரத்தில் வழிபட்டனர்.
9ம் நாளான நேற்று (அக்., 7ல்) ஆயுத பூஜையையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. என்.ஜி.ஓ., காலனி வழிவிடு விநாயகர் கோயிலில் உள்ள துர்க்கை சன்னதி உட்பட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொழிற்சாலைகள், தனியார் அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கார், ஆட்டோ ஸ்டாண்டுகளில் பூஜைகள் நடத்தப்பட்டு வாகனங்களுக்கு மாலை, தோரணம் கட்டி நகர், கிராமங்களில் அணிவகுத்து சென்றன.