உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஹயக்கிரீவர் சன்னதியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

விழுப்புரம் ஹயக்கிரீவர் சன்னதியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

விழுப்புரம்:விஜயதசமியை முன்னிட்டு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு  நெல்லில் எழுத கற்றுக் கொடுத்தனர்.

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள, ஹயக்ரீவர் சன்னதியில்  விஜயதசமி யன்று, வித்யாரம்பம் நடந்தது. அதனையொட்டி, ஹயக்ரீவருக்கு சிறப்பு  அபிஷேக ஆராதனை மற்றும் காலை 9:30 மணிக்கு தீபாராதனை வழிபாடு  நடந்தது.இதையடுத்து, விழுப்புரம் நகரைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களின்  குழந்தைகளை அழைத்து வந்து, கோவிலில் அர்ச்சனை செய்தனர்.

பின், குழந்தைகளை பெற்றோர் மடியில் அமரவைத்து நெல் வைக்கப்பட்ட தட்டில்,  ’அ’ எழுத, கற்றுக்கொடுத்தனர். இந்நிகழ்வினை ராமமூர்த்தி ஆச்சாரியார்  செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !